rakshi
Back

நீலகிரிப் பசலை / Ode on the Blue Mountains

இழையணி மாயோள் அன்ன இலங்கு மீன்கள் கொய்-துலங்கும் கோடைச் செழிற் காலம். அழிதுளி உயிர் பறித்து நகுமே, துறைவனின் மாக்களும் மனைத் தாழ்த்தி இன்துயில் பெறவே நின்கண் அயலதி ருப்பதேன் எம் நீல குறிஞ்சித் தேனே! இப்பெருமலை முகடுகள் மைப்படா மலிருக்க யான் புறங்காத்தல் வேண்டும் — ஆயின் யானோடு நீரும் துயிற்றிலரே, நாண் இல நும் கண், இந் நடுநாளன்று ஒளிப் பொருந்தி உளதே நலம் குன்ற! நோயாம் ஆகட்டும் மலரே! பெயலருவியாகச் செங்குருதியும் பொழிந்த தன்றோடு வானம், யான் கண்டேனே இவ்விளம் பிறையோன் மைந்தனை. நீள் ஆர் எம் இரவு நீள் ஆர் அழகன் தன் பல்லிதழ் இமை அன்ன. நெய்தல் கரை வளை நல்லோன் வில் புருவம், நேர்மைக் கொள் ஈயும் இளந்தளிர் கரங்கள், நடுவே இவனின் பவளத் தீம் இதழ் காணும் செவ்வரளி வதனம் வாடும். போற்றலும் போதுமல்ல இத்துயர் களை தூயவன் நல்லியல்பும்: ஊற்றுநீர் ஒளிக் கொணர்ந்து தூமலர்களிடையே புனல் தூவி ஓசை இயம்புமே அவ்வும் பிறவும் மேலும் இன்னிசையோ கதிர்முகத்தான் முகந்த மொழியாம், நலமுற நல்குவான் தேன் ஆறாகத் தன் யாண் குரலில், கற்றலும் வாய்மையும் நன்மையும், செவி இனிது ஊற. நிறம் அரும்பட்டுமே நன்னுதல் அம்மரகதச் சிலையாற் பரம்பு மலையனைப் பெயராது கண்டதவறு உடையேன் யானே. அயர்ந்தால் மறக்குவேன் கொள் ஈரநெஞ்சத்தானை, துஞ்சாது அல்ல ஏன் செய்வேன், யானிரப்பது சீர் மெய்ந்துணையின் வரம் — அன்றோ யாமத்தே யான் உள்ளம் உகந்து துயில்வேன் எம் நீலத்தொகுமுகையே. TRANSLATION: Like a glamourous dark maiden adorned with gleaming jewels, Stars glisten, threaded along the skies In this season rich with monsoon. Droplets of destruction pluck lives and mock, Even the coastal chieftain's people have bolted their doors in safety, Abandoning the seas to rest in peaceful slumber. Yet why do you, my blue Kurinji nectar, remain awake? Lest these mountain peaks be lined in kohl by the dimming clouds, I must stand guard — yet You have not slept either, Your shameless eyes at this midnight hour Are filled with light, Depleting your beauty. Let me suffer in this affliction, my flower! My crimson blood shall drain like waterfall, As did the sky, which poured forth from the day I beheld the Son of this crescent moon. Let my night stretch long as the Many-petalled eyelashes of the beautiful man, whose Bow-like eyebrows resemble the curved shore, Whose coral sweet lips cause the red oleander’s demeanour to wilt. Though visibly mighty by unfaltering shoot of integrity, His compassionate hands are soft like young leaves, Praise falls short, to describe the traits Of the pure one who eases sorrow: The stream that carries light among pristine flowers, Sprays mist and conducts pleasant sounds; Sweeter than this melody, better than all other compositions, and above all! Is the sincere approach of the radiant-faced, Whose every word, like a river of honey, flows — Carefully dispensing knowledge, truth, and goodness. In his entrancing voice, Which lingers deeply in our ears. Let the color fade from my brow, For I have beheld the emerald-bodied one of Parambu, Incessantly, in greed! Thus, I carry the sin of my gaze. If I grow weary, will I forget this soft-hearted man? If so, what shall I do but refrain from sleep? All I seek is blessed time with my truthful companion The day I shall receive it, On that very night, my heart will concede to slumber. Oh, my clustered blue flowers! EDIT: My friend and I have collaborated to tune this poem, take a look at how she has beautifully composed it to a Classical Raga: https://www.instagram.com/reel/DUuQp8YEgQ_/?igsh=MWZ0N3l3Mjh3d2Vsbg== (On Instagram)